செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

54பார்த்தது
தாங்கள் படித்த அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக1. 20 லட்சம் செலவில் 50 மின்விசிறி வழங்கும் விழாஆசிரியர்களுக்கும்கௌரவிப்பு



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் அரசினர் இந்து மேல்நிலைப் பள்ளியில்1984 - முதல் 86 வரை இரண்டு ஆண்டுகள் படித்த 40 மாணவர்கள் தாங்கள் படித்த இப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக ரூபாய் 1. 20 லட்சம் செலவில் அனைத்து வகுப்புகளுக்கும்
பயன்பெறும் வகையில் (சீலிங்பேன்கள்) மின்விசிறிகள் முன்னால் மாணவர்களான
சந்திரபிரகாஷ் சுதாகரன்
பாலாஜி ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் பாபு அவர்களிடம் வழங்கினர் மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர் ராஜேந்திரன் அவர்களை மாணவர்கள் கௌரவப்படுத்தி பொன்னாடை போர்த்தினர் விழாவில் 84 86 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான மகேஷ் ராஜேந்திரன் உள்பட சக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி