திருப்போரூரில் சித்த மருத்துவ சிறப்பு முகாம்
மழையும் வெயிலும் மாறி மாறி பொதுமக்களை வாடி வரும் நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களை ஆங்காங்கே நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் சிறுங்குன்றம் அரசு ஆரம்ப நிலைய சித்த மருத்துவம் மற்றும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சித்த மருத்துவ முகாமை நடத்தியது சிறுங்குன்றம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் வானதி நாச்சியார் கலந்து கொண்டு சித்த மருத்துவம் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் மாத்திரைகளுடன் எண்ணெய்களும் மூலிகை பொருட்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது தொடர்ந்து உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் தீர்வு காணும் வகையில் என்னென்ன நோய்களுக்கு என்னென்ன வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் இறுதியில் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது முகாமில் சித்த மருத்துவ பிரிவினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் என பலர் உடனிருந்தனர்.