பெரும்பேர்பண்டிகை மற்றும் எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
வெகு விமரிசையாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை
சத்ரு சம்ஹார பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சிம்மையவிநாயகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில்களில்
கடந்த 2 ம் தேதி கந்த சஷ்டி விழா முருகப்பெருமானுக்கு
சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் மூலவருக்கு விசேஷ மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் மாலை முருகப்பெருமாள் அம்பாளிடம் வேல் பெற்று பல்வேறு முகத்துடன் தோன்றிய யானை முகம், சிங்கமுகம், சுய முகத்தோடு வந்த சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து
விழாவின் கலந்து கொண்ட
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.