ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெளுக்கிறது. அங்குள்ள ஒரு பகுதியில் இன்று (டிச. 02) நிலச்சரிவு ஏற்பட்ட போது அதை காண்பதற்காக பொதுமக்கள் குவிந்தார்கள். இதன் போது திடீரென மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் சிக்கி கொண்டார். பின்னர் மெதுவாக அதிலிருந்து தன்னுடைய முயற்சியால் வெளியே வந்த அவரை அங்கிருந்தவர்கள் கை கொடுத்து காப்பாற்றினார்கள்.