சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று (டிச. 01) பொறுப்பேற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக அந்த பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.