வெள்ளை கலரில் கொழுக்கட்டை செய்து கொடுப்பதை விட கலர் கலராக கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர். செயற்கை கலர் சேர்க்காமல் சங்குப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் மாவு பிசைந்தால் நீல கலர் கொழுக்கட்டை ரெடி. செம்பருத்தி அல்லது ரோஜா இதழை கொதிக்க வைத்து வடிகட்டினால் சிவப்பு கலர் ரெடி. அதேபோல் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் சேர்த்து கலர் கலராக கொழுக்கட்டை செய்யலாம்.