தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, நாமக்கல், கரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூரில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.