திருவள்ளுவரின்றத்தில் மீன் குஞ்சுகள் குளத்தில் விடும் விழா
மீன் உற்பத்தியை அதிகரிக்க 26 ஆயிரம் மீன் குஞ்சுகளை நீர் நிலைகளில் செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர் டி அரசு ஆகியோர் நீர் நிலைகளில் விட்டனர் செங்கல்பட்டு மாவட்டம் மீன்வளத்துறை மூலம் கிராம புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்தினில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மீன் வளர்ப்பில் பொதுமக்களுக்கு ஆர்வம் வேண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில் மீன் குஞ்சுகள் இனப் பெருக்கத்திற்க்காக நீர் நிலைகளில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் நாராயண சர்மா கலந்து கொண்டு ரோகு மற்றும் கட்லா வகையான 26, 000 ஆயிரம் மீன்குஞ்சுகளை திருக்கழுக்குன்றம் அடுத்த அகத்தீஸ்வர மங்கலம் பகுதியில் உள்ள குளம் மற்றும் ஏரிகளில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் தனசேகர், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் கோபால் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.