தமிழ்நாடு முதல்வர் அறிவித்த திட்டமான ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட அருங்குன்றம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி பகுதியில் பனை விதை நடும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்துகொண்டு ஏரிக்கரை பகுதியில் 5000 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கான பணிகளை துவக்கி வைக்கும் விதமாக பனை விதைகளை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார்
அதனைத் தொடர்ந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை பார்வையிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும், பரிசோதனை செய்யப்பட்ட உள்நோயாளிகளுக்கு தேவையான மருந்து பெட்டகத்தையும், அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், துணை சேர்மன் சத்யா சேகர் திருப்போரூர் வேளாண் ஆத்ம குழு தலைவர் பையனூர் சேகர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.