செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலால் 6-வயது சிறுமி உயிர் இழப்பு

70பார்த்தது
செய்யூர் அருகே டெங்கு காய்ச்சலால் ஆறு வயது சிறுமி உயிர் இழப்பு, மேலும் 9 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை.!!


மழைக்காலம் தொடங்கினால் தமிழ்நாடு முழுவதும் டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க தொடங்குகின்றன.


இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் கடந்த மாத பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் விஷ காய்ச்சல் பரவி வருகின்றன

செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுரு அமுல் தம்பதியினருக்கு 6 வயது சிறுமி யாத்திகா கடந்த சனிக்கிழமை அன்று விஷக்காய்ச்சல் அறிகுறிகளுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி யாத்திகா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒன்பது பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி