மேல்மருவத்தூரில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 1500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
தா. மோ -அன்பரசன் அவர்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரியில் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து சுமார் 3000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர். இதில் 1500 பேருக்கு உடனடியாக பணி நியமன நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்கள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு பணி நியமன ஆனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த முகாமில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு, ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.