பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

75பார்த்தது
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்.

அதிக அளவு கார்கள் சென்னை நோக்கி படையெடுப்பதால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.


தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் விடுமுறை என்பதால் அதிக அளவிலான பொதுமக்கள் கடந்த புதன்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் அதிக அளவில் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் சென்றனர்

இந்நிலையில் விடுமுறை கழித்து அதிக அளவில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்

இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்க சாவடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன


அதேபோல் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்ற வருவதால் இந்த போக்குவரத்து நெரிசானது ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி