கல்பாக்கம் அருகே இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் பட்டா இடத்தில் பொது வழி சாலை போட முயற்சிக்கும் ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் போராட்டம் தங்களது ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் பகுதி மற்றும் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட உய்யாலி குப்பம் மீனவர் பகுதி இணைக்கும் சாலையை புதியதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் இணைப்பில் உள்ள 20 மீட்டர் சாலைக்கான இடம் உய்யாலிகுப்பத்திற்கு சொந்தமானது எனக்கூறி அங்கே சாலை அமைப்பதற்கு உய்யாலிகுப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய சேர்மேன் அரசு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் தங்கள் சுய லாபத்திற்காக அந்த சாலையை போட்டே தீருவோம் என அராஜகத்தில் ஈடுபடுவதாக கூறி உய்யாலி குப்பம் பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சாலை பணிகளை தடுத்து நிறுத்த கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.