தொடர்மழையை தொடர்ந்து படூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

71பார்த்தது
தொடர்மழையை தொடர்ந்து படூர் ஊராட்சியில் மருத்துவ முகாமை முன்னெடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகம். நன்றி தெரிவித்த கிராம மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் தொடர் மழையை தொடர்ந்து கடந்த சில தினங்களாக இயல்பு நிலை திரும்பிய நிலையில் பொதுமக்களுக்கான மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒருங்கிணைத்தது தொடர்மழை மற்றும் பொதுமக்களின் நலம் கருதி படூர் ஊராட்சி மன்றம், சுப்ரீம் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமை படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தொடர் இருமல், காய்ச்சல், கண் பரிசோதனை உடல் எடை பரிசோதித்தல் தொடர் இருமல் தலைவலி என மழையால் ஏற்ப்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர் துணை தலைவர் வனிதா சேட்டு அறக்கட்டளையின் செயலர் சங்கீத் வார்டு உறுப்பினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர் முகாமில் ஆண்கள் பெண்கள் முதியோர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி