திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கந்த சஷ்டி இலட்சார்ச்சனை விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத கந்த சஷ்டி பேருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்,
அந்தவகையில் இன்று அதிகாலை 5: 30 மணி அளவில் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு ஐப்பசி மாத கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காட்டப்பட்டது,
அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாட வீதிகளில் கிளிவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார், முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வருகிற 07 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 08 ஆம் தேதி திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்ச்சியை இந்து அறநிலையத் துறை சார்பில் கோயில் செயல்அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.