திருக்கழுக்குன்றம் அடுத்த வள்ளிபுரம் பகுதியில் சென்னை ஐஐடி சார்பில் கட்டப்படும் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், விவசாய நிலத்தை பாழாக்க வேண்டாம் என கோரி ஐஐடி அலுவலர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய வள்ளிபுரம் கிராமத்தில் சென்னை ஐஐடி சார்பில் சர்வே எண் 143 ல் குப்பை கிடங்கு அமைக்கவும், மீன் வளர்ப்பு குட்டை அமைக்கவும் நிலத்தினை அளவிடும் பணி நடைபெற்றது இதற்கு ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தடையையும் மீறி நிலத்தை அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டதால் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஒன்று சேர்ந்து ஐஐடி அலுவலரை சிறை பிடித்தனர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பிரச்சனை நடந்து வருவதாகவும் அமைதி பேச்சு வார்த்தையிலும் பொதுமக்கள் உடன்படாததால் விவசாய நிலம் அதிகம் உள்ள இந்த இடத்தில் நெல் மணிகள் உலர வைக்க நெல் களமும் அப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் எடுத்து செல்லக்கூடிய பாதையாக பயன்படுத்தி வருவதாகவும் இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கவோ மீன் குட்டை அமைக்கவோ கூடாது எனவும் கிராமத்தில் உள்ள ஒதுக்குப்புற பகுதியில் அதை கட்டிக் கொள்ளுங்கள் என்றும் விவசாய நிலம் அருகே ஏன் குப்பை கிடங்கு கட்ட ஐஐடி முனைகிறது என கேள்வி எழுப்பினர்.