செங்கல்பட்டு நகரில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை பத்து நாட்களாக நடைபெறுவது வழக்கம் 130 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் தசரா பண்டிகையில் வெளி மாவட்டத்தில் இருந்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம் அந்த வகையில் செங்கல்பட்டு தசரா பண்டிகையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் விகாஷ் ஆகியோர் லேடிஸ் ஹேண்ட் பேக் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் இந்த நிலையில் தசரா பண்டிகைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி லேடிஸ் ஹேண்ட் பேக்கை பறித்து சென்றனர் இதனை தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பாலமுருகன் மற்றும் விகாஷ் ஆகியோர் புகார் கொடுத்தனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதனை தொடர்ந்து இரண்டு இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் முதல் கட்ட விசாரணையில் கைதான இளைஞர்கள் செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த ஜாய்சன் மற்றும் செங்கல்பட்டு சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்த பூவரசன் என தெரிய வந்தது இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செங்கல்பட்டு தசரா பண்டிகையில் கத்தியை காட்டி மிரட்டி லேடிஸ் ஹேண்ட் பேக் பறித்து சென்றதாக ஒப்புக்கொண்டனர். பின்பு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.!!