செங்கல்பட்டில் பாம்பு கடித்து தொழிலாளி பலி
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(36). மகேந்திரா சிட்டி அடுத்த அஞ்சூர் கிராமத்தில் தங்கி, கட்டட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் தற்காலிகமாக தங்கும் அறை அமைத்து, அதில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு, அறையில் துாங்கிக் கொண்டிருந்த போது, சுரேஷின் வலது கையில் பாம்பு கடித்தது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (நவம்பர் 23) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.