செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கழனி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, கோ பூஜை , வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது
இரண்டாம் நாள் விநாயகர் பூஜை வருண பூஜை அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகமத்தை முன்னிட்டு மேலும் மங்கள வாத்தியங்கள், செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கரகங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கூடுவாஞ்சேரி, பெருமாள்நல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்வில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.