செங்கல்பட்டில் இரண்டாவது நாளாக நடைபெறும் வருமான வரி சோதனை

77பார்த்தது
செங்கல்பட்டில் பிரபல தொழிலதிபர் வீடு மற்றும் தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை

செங்கல்பட்டில் பிரபல தொழிலதிபர் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான வெற்றி ரியல்ஸ் மற்றும் அவரது கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெற்றி ரியல்ஸ் நிறுவனம் காலி நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும், கட்டிடங்கள் கட்டித்தரும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 11-மணி முதல் வேலாயுதத்தின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் உள்ள பாலிஹோஸ் என்னும் தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவிலும் நடைபெற்ற சோதனை இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி