ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் இரண்டாம் கட்ட துவக்க விழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரத்தி ஊராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் இரண்டாம் கட்ட துவக்க விழாவை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மலர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு ஊட்டச்சத்து குறைபாட்டால் உள்ள குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வாங்கி பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு ஓர் ஆண்டு வரையாவது தாய்ப்பால் வழங்க வேண்டும் வணங்கினால் மட்டுமே குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் அதனால் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என தாய்மார்களுக்கு கேட்டுக்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாரதி, அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் ரங்கராஜன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரபாபு மற்றும் தாய்மார்கள் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.