கூடுவாஞ்சேரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 36 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன
இந்த நிலையில் அவரது வீட்டு அருகாமையில் உள்ள 17 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக பேசி வந்துள்ளார்
பின்பு திருமணம் செய்து பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது பின்பு சிறுமி வீட்டிற்கு வராததால் பெற்றோர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில்
அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அழைத்துச் சென்றார் என்பது தெரியவந்தது பின்பு சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து
நீதிமன்றத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.