செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியை செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி அரசு மருத்துவமனை, அரசு கலைக் கல்லூரி வழியாக சென்று ராட்டினங்கிணறு பகுதியில் நிறைவடைந்தது.
அப்போது கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டும் பேரணியில் ஈடுபட்டனர். இதில் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் லட்சுமிபதி, உதவி ஆய்வாளர் டில்லிபாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.