கர்நாடகா: பெங்களூருவில் விற்பனையாகும் ஐஸ்கிரீம் மற்றும் கூல்ட்பிங்ஸில் துணி துவைக்கும் சோப்புத்தூள் கலக்கப்படுகிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 97 நிறுவனங்களில் ஐஸ்கிரீம்களை உருவாக்க சலவை தூளையும், குளிர் பானங்களில் நுரையை அதிகரிக்க பாஸ்போரிக் அமிலத்தையும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செலவை குறைப்பதற்காக சலவை தூள், யூரியா அல்லது ஸ்டார்ச் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.