உளுந்துார்பேட்டை: கொத்தனார் தற்கொலை
உளுந்துார்பேட்டை அடுத்த ஆர். ஆர். குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 40; கொத்தனார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். கடனை கட்டுமாறு நிதி நிறுவன ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்து சென்றனர். இதனால் அவரது மனைவி செல்வி கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம்(அக்.22) இரவு 11: 00 மணியளவில் முருகன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.