
கள்ளக்குறிச்சி: அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த மார்ச், 31ம் தேதி வரை ஏற்பட்ட காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி காலி பதவியிடங்களுக்காக வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல், மையங்கள், காலி பணியிடங்கள் ஆகியவற்றின் விவரங்கள் உட்பட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த கருத்துகள் அரசியல் கட்சி பிரதிகளிடம் கேட்டறிந்து, அதற்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் துறை அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.