குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது

60பார்த்தது
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நகர பகுதியில் உள்ள கவரிங் கடையில், எம். ஆர். என். , நகரைச் சேர்ந்த சென்னிகிருஷ்ணன் மனைவி லட்சுமி, 48; சென்னிகிருஷ்ணன், 53; செம்பராம்பட்டு மூர்த்தி மனைவி சந்திரலேகா, 32; மற்றும் சரவணன் ஆகியோர் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து லட்சுமி, சென்னிகிருஷ்ணன், சந்திரலேகா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


அவர்களிடமிருந்து ரூ. 3, 400 மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும். 17 ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி