சொத்து பங்கு பிரிப்பது தொடர்பாக விவசாயி தற்கொலை

52பார்த்தது
சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் கலையரசன், 23; விவசாயி. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்குமிடையே சொத்து பங்கு பிரிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி பிரியா, சிறுபாக்கத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் 29ம் தேதி மாலை 6: 00 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறியில் கலையரசன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி