கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 30ம் தேதி ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் 15 துறைகளைச் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் பெரியகொள்ளியூர் கிராமத்திலும், திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றியம் குலதீபமங்கலம் கிராமத்திலும், திருநாவலுார் ஊராட்சி ஒன்றியம் திருநாவலுாரிலும் நடக்கிறது.
அதேபோல் உளுந்துார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நெடுமானுார் கிராமத்திலும், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கரடிசித்துார் கிராமத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.