தமிழ்நாட்டில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை என தமிழக ஆளுநர் ரவி தமிழ்நாட்டை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றது என நினைக்கும் வடமாநிலத்தவர், தமிழ்நாட்டை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். பாதுகாப்பான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் அதிகளவில் பெண்கள் படிக்க வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றார்.