கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை பி. டி. ஓ. , க்கள் மாற்றம்

61பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை பி. டி. ஓ. , க்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 துணை பி. டி. ஓ. , க்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், துணை பி. டி. ஓ. , க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கல்வராயன்மலையில் பணிபுரிந்த ஷபி கள்ளக்குறிச்சிக்கும், தியாகதுருகம் தினகர்பாபு ரிஷிவந்தியத்திற்கும், திருநாவலுார் டொம்மையன், ஆறுமுகம் முறையே திருக்கோவிலுார், தியாகதுருகத்திற்கும், திருக்கோவிலுார் செல்வி திருநாவலுாருக்கும், தியாகதுருகம் ஜெயசுதா கள்ளக்குறிச்சிக்கும், சங்கராபுரம் பார்வதி கள்ளக்குறிச்சிக்கும், கள்ளக்குறிச்சி முகமதுஜமீல், பிரபாகரன் முறையே சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தமாக 45 துணை பி. டி. ஓ. , க்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி