அம்பானி, அதானிகளுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்துள்ளார்!

53பார்த்தது
அம்பானி, அதானிகளுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்துள்ளார்!
அம்பானி, அதானிகளுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, "அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மோடியை பரமாத்மா அனுப்பவில்லை. மற்றவர்கள் உயிரியல் ரீதியாக படைக்கப்பட்டிருந்தாலும், மோடி அப்படி அல்ல" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி