கேரளா: திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் “வரைவு நெறிமுறைகள் - 2025" குறித்த தேசிய மாநாடு நேற்று (பிப்., 20) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்றார். தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, கோ.வி.செழியன் வாழ்த்து தெரிவித்தார். இதில் பேசிய அமைச்சர், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவில்லையெனில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை வழங்க இயலாது என மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது அகம்பாவத்தின் உச்சம் என்றார்.