தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் மீது ஊழல் புகார் கூறியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூபாலப்பள்ளியைச் சேர்ந்த ராஜலிங்கமூர்த்தி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்கு ஒரு நாள் முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். கே.சி.ஆர் மகன் கே.டி.ராமராவுக்கு நெருக்கமான முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ரமண ரெட்டியின் ஆதரவாளர்கள் மீது ராஜலிங்கமூர்த்தியின் மனைவி புகார் அளித்துள்ளார்.