ஈரோடு: வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேர் கைது

79பார்த்தது
ஈரோடு: வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேர் கைது
திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கட்டிட வேலை, டெய்லர் வேலை, கூலி வேலை, செங்கல் சூளை உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. வங்களாதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் குடியேறி அங்கிருந்து திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் குடியேறி உள்ளனர். இதை அடுத்து சட்ட விரோதமாக குடியேறிய வங்களாதேசத்தை சேர்ந்தவர்களை ஈரோடு, திருப்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி