கேரளா: திருவனந்தபுரம் நகரூரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தாயின் கள்ளக்காதலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளில் நான்கு மைனர் சிறுவர்களும் உள்ளனர். சிறுமியை இவர்கள் பலமுறை தனித்தனியாக பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளியில் நடந்த கவுன்சிலிங்கின் போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.