சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி சந்தித்து பேசினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தல் பற்றி விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றுவிட்டது. ஆனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக பேசப்பட்டு வருகிறது.