
ஈரோடு: மது வாங்கிக் கொடுத்து கொடூர கொலை.. 2 பேர் கைது
பெருந்துறை அருகே உள்ள கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த தங்கராசு, யுவராஜ் என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் தங்கராசு மற்றும் அவரது நண்பர் பூவேந்திரன் ஆகியோர் மது அருந்த யுவராஜை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொடுத்த கடன் தொகையை திருப்பி கேட்டதால், யுவராஜை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.