சென்னிமலை பகுதியில் நடமாடும் மருத்துவ முகாம்
சேவா பாரதி தமிழ்நாடு, நந்தா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச நடமாடும் மருத்துவ முகாம் சென்னிமலை அருகே 1010 நெசவாளர் காலனியில் நடைபெற்றது. முகாமுக்கு ஆர். எஸ். எஸ் அமைப்பின் தென் பாரத சேவா பொறுப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். முகாசிபிடாரியூர் ஊராட்சி துணைத்தலைவர் சதீஷ் என்கிற சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர். எஸ். எஸ் அமைப்பின் ஈரோடு கோட்ட அமைப்பாளர் ஹரிஷ் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில், ஆர். எஸ். எஸ். சென்னிமலை ஒன்றிய செயளாலர் ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட சேவை தொடர்பாளர் நல்லசாமி, நந்தா மருத்துவக்கல்லூரி மக்கள் தொடர்பாளர் நிர்மல், பாஜக சென்னிமலை ஒன்றிய பொது செயலாளர் சுந்தர்ராசு, திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.