'வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு 36 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது'

53பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நல்லாம்பட்டி அருகே கீழ் பவானி பாசன வாய்க்காலின் அடியில் மழைநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட நீர் பசிவு ஏற்பட்டதையடுத்து கீழ்பவானி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டு, நீர் கசிவை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, நேற்று முன்தினம் காலை கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு 36 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் கசிவை சரி செய்தாலும் உறுதியுடன் பணிகள் செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் தண்ணீர் செல்வதில் இதுவரை எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை. இதில் 10 பீடர் லைன்களில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதை சரிசெய்ய தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பிரச்சனை சரி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி