ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் எக்ஸிட் பேட்டரி ஏற்றி வந்த லாரியின் டீசல் டேங்க் வெடித்ததால் தீபற்றி முற்றிலுமாக எரிந்த லாரி.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் பத்தாம் பாளையம் பிரிவு பகுதியில் புனேவில் இருந்து கோவை நோக்கி எக்ஸிட் பேட்டரி ரோடுகளை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஏழுமலை என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பெத்தம்பாளையம் பிரிவு பகுதியில் வந்த பொழுது லாரியின் டீசல் டேங்க் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரி முற்றிலுமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. லாரியிலிருந்து கரும்பு புகை வெளியேறி தீப்பற்றியதை பார்த்த ஓட்டுநர் ஏழுமலை லாரியை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு உயிர் தப்பி உள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்புத் துறையினர் பேட்டரி ஏற்றி வந்த லாரியில் பற்றிய தீயை போராடி அனைத்தனர். ஆனாலும் லாரி மற்றும் பேட்டரிகள் முற்றிலுமாக தீயில் இருந்து நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.