பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி எல்பிபி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் ஆயிரம் கன அடிக்கு குறைவாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை இந்த தண்ணீர்
57-வது மைலைக் கடந்த நிலையில் பெருந்துறையை அடுத்துள்ள நல்லாம்பட்டி பகுதியில் 47 ஆவது மைலில் உள்ள மழை நீர் வடிகால் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் வெளியேறியது. இதனால் வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் நிலை இருந்தது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் உடனடியாக மாவட்ட கலெக்டர், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டு, சம்பவ இடத்தில் நீர் கசிவை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.