ஈரோடு: புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

57பார்த்தது
ஈரோடு: புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் கோபி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட கரட்டடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பால் சொசைட்டி ஒன்றின் அருகில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்களான பான்மசாலா, குட்கா ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (53) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 331 கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி