பெருந்துறையை அடுத்துள்ள ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் உற்சவர் வெற்றி வேலாயுதசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். சுற்றுப்பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.