ஈரோடு நாராயண வாசலில் உள்ள ஒரு தனியார் பள்ளி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை எடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையும் மாலை 5 மணி வரை நீடித்தது. சோதனை முடிவில் புரளி என தெரிய வந்தது.
இதன் பின்னரே போலீசாரும், பெற்றோரும் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். இரண்டு பள்ளிகளுக்கு நேரடியாக இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும் இரண்டு பள்ளிகள் இமெயில் ஐடி தவறாக வந்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் ஐடி முகவரியை வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.