ஈரோடு: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; மின் தடை அறிவிப்பு
ஈரோடு தெற்கு மின் கோட்டத்திற்கு உட்பட்ட வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21ம் தேதி(வியாழன்) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நாடார்மேடு(பகுதி), நொச்சிக்காட்டு வலசு, ரீட்டா பள்ளி பகுதி, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், எடிசியா தொழிற்பேட்டை(சோலார்), போக்குவரத்து நகர், சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர்(19 ரோடு பகுதி), பச்சப்பாளி பகுதி, சஞ்சய் நகர், பாலுசாமி நகர், சிஎஸ்ஐ காலனி, பெரியகாடு ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.