அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2ம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பழனி கோவிலில் தரிசனம் செய்ய காலை 11 மணிக்கு நடை அடைக்கபட்டது. தற்போது மலைகொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 6. 30 மணிக்கு மேல் முருக பெருமான் கிரிவீதியில் உள்ள கஜமுகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது, நாளை காலை 9. 30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்வும் நடைபெறவுள்ளது. மேலும் மாலை நான்கு கிரிவீதியில் நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் நிகழச்சியிலும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.