திண்டுக்கல் மாவட்டம் பழனி வையாபுரி குளத்தில் கரையோரத்தில் இருந்த பரிசலை எடுத்துச் சென்ற போது காற்றின் வேகத்தால் பரிசலை கட்டுப்படுத்த முடியாமல் கூச்சலிட்ட இளைஞரை காப்பாற்ற சென்ற இரண்டு இளைஞர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் மீட்கப்பட்ட நிலையில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.