120 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கம்

70பார்த்தது
பழனி நகருக்கு திருவிழா காலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தங்கும் விடுதிகள் உணவகங்கள் என வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருவதாலும், மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதாலும் பாதாள சாக்கடை திட்டம் பழனிக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்களும், வணிகர்களும் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் உணவகங்கள், தங்கும்விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நகரின் மையப் பகுதியில் உள்ள வையாபுரி குளம் தண்ணீர் மாசுபட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட அமைப்பதற்கு கழிவுநீர் உந்து குழாய் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகளுக்கு பூமி பூஜை விழா பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெ. செந்தில்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு அளவீடு செய்யும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் பணிகளுக்கான ராட்ச குழாய்கள் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.. நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி நகர செயலாளர் வேலுமணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி