திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளது இந்நிலையில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி , புலியூர், வாழைகாட்டுஓடை போன்ற கிராமங்களில் அதிக தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது வில்பட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் அங்கு வசிக்கும் மக்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்து செல்வது வழக்கமாக இருந்தாலும் தங்கும் விடுதியில் இருந்து கருப்பு கலர் பாலித்தீன் பைகளில் குப்பைகளை கலந்து கொட்டுவதால் கிரிஸ் பகுதியில் அதிக குப்பைகள் சேர்ந்து மலைபோல் குவிந்திருந்தது மேலும் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் குப்பைகள் அகற்றாமல் இருந்து வந்த நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதும் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவல நிலையும் ஏற்பட்டு வந்தது இருந்தபோதிலும் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் குப்பைகளை வில்பட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து கிரஸ் பகுதியில் உள்ள கிடங்கில் கொட்டி வந்துள்ளனர் இந்நிலையில் இன்று திடீரென்று குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட உள்ளது அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.